நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்திய தமிழ் சினிமாவிற்கு இணையாக வளர்ந்து வந்த இலங்கை தமிழ் சினிமா, அந்த நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால் முடக்கப்பட்டிருந்தது.

எனினும் சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் போல மீண்டும் இலங்கை தமிழ் சினிமா உயிர்த்தெழும் வண்ணம் வெளியாகவிருக்கிறது ‘கோமாளி கிங்ஸ்’ எனும் முழு நீள நகைச்சுவை திரில்லர் திரைப்படம்.

இவ் திரைப்பட குழுவினர் இன்று (24.02) காலை 10.30 மணியளவில் வவுனியா வசந்தி திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர். இவர்களை வவுனியா மாவட்ட கலைஞர்களும் , தமிழ் விருட்சம் அமைப்பினரும் சேர்ந்து மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.

திரைப்படத்தினை பார்வையிட்டவர்களுடன் இணைந்து கோமாளி கிங்ஸ் இயக்குனரும் நடிகருமான கிங் ரட்ணம் , நடிகைகளான நவயுகா , சத்தியப்பிரியா திரைப்படத்தினை பார்வையிட்டதுடன் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்தனர்.