இந்திய சினிமாவையே தன்னுடைய நடிப்பால் கட்டிப்போட்ட நடிகை ஸ்ரீதேவி நம்முடன் இன்று இல்லை. இது பிரபலங்களை தாண்டி ரசிகர்களையும் பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தற்போது அவரது மரணம் குறித்து பலர் பேசி வருகையில் ஒரு அதிர்ச்சியும், சோகமான செய்தியும் உலா வருகிறது. அதாவது போனி கபூரின் முதல் மனைவி மோனா கபூர் அவரது மகன் அர்ஜுன் கபூர் நடித்த முதல் படம் வெளியாக இருக்கும் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.

அதேபோல் ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள முதல் படம் வெளியாகவுள்ள நிலையில் இவரும் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் பலருக்கும் சோகத்தை தந்துள்ளது.