நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் துபாயில் சனிக்கிழமை இரவு காலமானார். 54 வயதில் திடீர் மாரடைப்பால் ஸ்ரீதேவி மரணமடைந்தது இந்தியு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

துபாயில் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ஸ்ரீதேவி சென்றிருந்த போது, அங்கு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் இறந்த நிலையிலே தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து , திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் உள்ள தனது அறை பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகின.

அது மட்டும் இல்லை, மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் கழுத்தில் காயம் இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஸ்ரீதேவியின் திடீர் மரணத்தை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வெளிவந்த வண்ணமே உள்ளன. பொலிஸாரின் தீவிர விசாரணைகளும் ஒரு புறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த நிலையில் , இன்றிரவு ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டுவரப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் நாளை தான் அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே மரணம் தொடர்பான மர்மம் நீங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் ஸ்ரீதேவியின் மரணத்தில் இன்னும் எத்தனை எத்தனை மர்மங்களை வெளிக்கொணரப் போகின்றனர் என்று..