கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ள சின்மயி, நடிகர்கள் கல்யாண் மற்றும் ஜான் விஜய் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு மிடூ மூலம் அது குறித்த விவரங்களை பலர் அனுப்பி வருகிறார்கள்.
இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் பெயர் குறிப்பிடாமல், நடன இயக்குனரும் கல்லூரி வாசல், சிட்டிசன், வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகருமான கல்யாண் பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை அனுப்பி உள்ளார்.
அதை சின்மயி டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இலங்கை பெண் கூறியிருப்பதாவது:-
“நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் ஆசையில் 2010-ல் சென்னை வந்தேன். டான்ஸ் மாஸ்டர் கல்யாணை சந்தித்து அவருடன் நடனம் ஆடினேன். அப்போது அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். உடனே ஆடுவதை நிறுத்தி விட்டேன்.