தளபதி விஜய்யின் சர்கார் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. தற்போது ஒருவழியாக அனைத்தும் முடிந்து தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கதை திருடப்பட்டது என இணை இயக்குனர் வருண் கொடுத்த புகார் தான் பெரிய விஸ்வரூபம் எடுத்தது. இயக்குனர் கே.பாக்யராஜும் சர்காருக்கு எதிராக பேசியதால் சர்ச்சை கோர்ட் வரை சென்று பின் ஒருவழியாக சமரசத்தில் முடிந்தது.

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி பேட்டி அளித்துள்ள இயக்குனர் சமுத்திரக்கனி “ஒருவருக்கு தோன்றும் கதை இன்னொருவருக்கும் தோன்றுவதை தவறு என சொல்ல முடியாது. அதனை சுமூகமாக பேசி முடித்துக்கொள்ள வேண்டும். இதனை கதை திருட்டு என்று சொல்வதே வருத்தமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.