ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடத்தில் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பற்றிய முக்கிய வி‌ஷயங்களை இயக்குனர் சங்கர் பகிர்ந்துள்ளார். 2.0 படத்தின் வில்லன் வேடம் மிக முக்கியமானது.

எனவே இதில் நடிக்க வைக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அணுகி இருக்கிறார்கள். அர்னால்டும் ஆர்வமாக இருந்து இருக்கிறார். ஆனால் ஹாலிவுட் நடிகருக்கும், இந்திய சினிமாவுக்குமான ஒப்பந்தங்களில் சில சிக்கல்கள் இருந்ததால் அது நிறைவேறாமல் போயிருக்கிறது.

அடுத்து ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமலை அணுகி இருக்கிறார்கள். அவர் சங்கரிடம் இந்தியன் 2 நடிப்பதில் தான் தனக்கு ஆர்வம் இருப்பதாக சொல்லிவிடவே அக்‌‌ஷய் குமாரிடம் சென்று இருக்கிறார்கள். இந்த வேடம் ரஜினியுடன் மோதினாலும் வில்லன் வேடமாக இருக்காது.

அவரது மோதலிலும் ஒரு நியாயம் இருக்கும் என்கிறார். 2.0 படத்தில் மொத்தம் 2100 கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றனவாம்.