பாகுபலி படத்தின் ஒன்றாக நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஆகியோர் காதலித்து வருவதாக தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.

ஆனால் அது உண்மையில்லை என பிரபாஸ் சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். மேலும் இரண்டு வருடங்களாக ஒன்றாக பணியாற்றினால் இப்படி வதந்தி வருவது சாதாரண ஒன்று தான் என அவர் கூறியுள்ளார்.

மேலும் ராணாவிடம் “பிரபாஸ் எந்த பாலிவுட் நடிகைகை காதலிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?” என ராபிட் பையர் ரவுண்டில் கேட்டபோது “கத்ரினா கைப்” என ராணா கூறிவிட்டார்.

தீபிகா, பிரியங்கா போன்ற நடிகைகள் ஏற்கனவே திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட நிலையில் கத்ரினா மட்டும் யாரையும் காதலிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது